வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2023 (15:17 IST)

ஆஸ்கர் விருது: 2 தகுதிகளைப் பெற்ற' காந்தாரா' படம் - இயக்குனர் டுவீட்

kantara
இந்திய சினிமாவில், தென்னிந்திய சினிமா படங்களுக்கு எப்போதும் தனி மதிப்புண்டு.

அந்த வகையில், கேஜிஎஃப்-1 ,2 ஆகிய படங்களுக்குப் பின் கன்னட சினிமா  மீது சினிமா மீது உலக  ரசிகர்கள் பார்வை குவிந்துள்ளது.

பல வித்தியாசமான படங்களை கொடுக்கும் கன்னட சினிமாவில் சமீபத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள படம் காந்தாரா.

இப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி கன்னடமொழியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வசூல் குவித்து வருகிறது.  இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருந்தார்.

ஆர்.ஆர்.ஆர் படம் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அதில் கீரவாணி இசையில் இடம்பெற்ற நாட்டுக்குத்து பாடல் இப்பட்டியலில் உள்ள நிலையில், தற்போது காந்தாரா படமும் ஆஸ்கருக்கு 2 தகுதிகள் பெற்றுள்ளதாக இப்படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும், இப்படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.