திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2017 (16:19 IST)

'மெர்சல்' பேனர் விழுந்ததால் ஒரு குடும்பத்திற்கே காயம்

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் இரண்டாவது வாரத்திற்கான பேனர் கட்டிவிட்டு சென்ற கேரள ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார் என்ற செய்தி கடந்த வாரம் வெளிவந்தது. இந்த நிலையில் மெர்சல் பேனர் விழுந்ததால் இன்று ஒரு குடும்பத்திற்கே காயம் ஏற்பட்டுள்ளது



 
 
சென்னை அருகேயுள்ள திருப்போரூரில் மெர்சல் படத்தின் 30 அடி பேனர் ஒன்றை விஜய் ரசிகர்கள் வைத்திருந்தனர். இந்த பேனர் சரியாக பொருத்தப்படாததால் இன்று திடீரென சரிந்தது. அப்போது அந்த வழியாக போய்க்கொண்டிருந்த காரின் மீது பேனர் விழுந்தது. இதனால் அந்த காரில் பயணம் செய்த தேவநாதன் என்பவரது குடும்பத்தினர்களுக்கு காயம் ஏற்பட்டது.
 
இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட புகார் குறித்து செங்கல்பட்டு துணை ஆட்சியர் ஜெயசீலன் கூறியபோது ''அப்பகுதியில் பேனர் வைக்க நாங்கள் அனுமதி அளிக்கவில்லை. இது அங்கீகரிக்கப்படாதது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார். பேனர் வைத்த விஜய் ரசிகர்கள் யார் என்று விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்றும் தெரிகிறது.