1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (15:42 IST)

காலாவதி ஆகிவிட்டது மெர்சல் எமோஜி: ரசிகர்கள் வருத்தம்

தென்னிந்திய திரையுலகிலேயே முதல்முறையாக ஒரு திரைப்படத்திற்கு டுவிட்டரில் எமோஜி வாங்கியது 'மெர்சல்' படத்திற்காகத்தான். இந்த நிலையில் விஜய் ரசிகர்களும், படக்குழுவினர்களும் இந்த எமோஜி.யை பெருமையாக நினைத்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை முதல் இந்த எமோஜி. டுவிட்டரில் தோன்றவில்லை



 
 
இதுகுறித்து விசாரித்தபோது 'எமோஜி.யின் காலம் காலாவதியாகிவிட்டதாகவும், எனவேதான் இமோஜி வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் 'மெர்சல்' படத்திற்காக நிறைய வித்தியாசமான புரொமோஷன் வேலைகள் செய்தனர். அதில் ஒன்றுதான் இந்த டுவிட்டர் எமோஜி. 'மெர்சல்'. இந்த மெர்சல் தற்போது காலாவதி ஆகிவிட்டாலும் அடுத்த விஜய் படத்திற்கு மீண்டும் ஒரு புதிய எமோஜி. வெளிவரும் என்று விஜய் ரசிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர்,.