செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2023 (11:51 IST)

திரைப்படத்தை மோசமாக விமர்சித்தவர்கள் மீது வழக்கு.. வரலாற்றில் முதல்முறை..!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திரைப்பட விமர்சனம் என்பது நியாயமாகவும் தர்மமாகவும் இருந்தது. ஒரு விமர்சனத்தை பார்த்து தைரியமாக அந்த திரைப்படத்தை பார்க்கலாம் என்று முடிவு செய்யலாம். 
 
ஆனால் சமூக வலைதளங்கள் வந்த பிறகு ஒரு செல்போன் மற்றும் இன்டர்நெட் கனெக்சன் வைத்திருப்பவர்கள் எல்லாம் விமர்சகர்ளாகி விட்டார்கள். மேலும் வேண்டுமென்ற நெகட்டிவ் விமர்சனம் தருவது, நெகட்டிவ் விமர்சனம் தருவதன் மூலம் தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறிப்பது போன்றவை தற்போது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. 
 
இந்த நிலையில் தனது படத்தை மிக மோசமாக விமர்சனம் செய்து  பணம் கேட்டு மிரட்டியதாக மலையாள திரையுலக இயக்குனர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது தமிழ்நாட்டில் அல்ல கேரளாவில் என்பதை குறிப்பிடத்தக்கது.  
 
இந்திய திரையுலகில் விமர்சனம் செய்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வேண்டுமென்றே நெகட்டிவ் விமர்சனங்கள் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran