1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 25 அக்டோபர் 2023 (15:13 IST)

பாரதியார் பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை! – அண்ணாமலை விமர்சனம்!

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியவற்றில் இருந்து முக்கியமான சில:



”தமிழக ஆளுநர் எழுப்பி உள்ள கேள்விகள் மிக முக்கியமானது. டி ஆர் பாலு அறிக்கையில் கவர்னரை ஒருமையில் திட்டுவதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருந்தார். 1967 க்கு பிறகு தலைவர்களை ஜாதி முத்திரை குத்தி பின்பற்றி வருகின்றனர். ஜாதி கலவரங்களை உருவாக்குவதற்கும் திமுக அரசு காரணமாக இருந்துள்ளது

தமிழகத்தின் ஆளுநரை ஒருமையில் பேசுவதை டி ஆர் பாலு நிறுத்திக் கொள்ள வேண்டும். திமுக அரசை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். பாரதியாரைப் பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு அருகதை இல்லை. பாரதியின் பாடல் வரிகளை திமுக ஏற்றுக்கொள்ளவே இல்லை. மேலும் ஒவ்வொரு சாதி கட்சியும் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்கள் புகைப்படங்களை வைத்துள்ளனர். ஆளுநர் கூறியது எந்த தவறும் இல்லை

பாட புத்தகத்தில் எந்த தலைவர்களுடைய குறிப்பும தமிழகத்தில் இல்லை. தமிழகத்தின் நுழைவாயில்களின் திமுக சார்ந்தவர்கள் பெயர் மட்டுமே உள்ளது. மேலும் மகாத்மா காந்தியை அதிகமாக தூக்கிப் பிடிப்பது பாஜக. கோட்சேவை யாரும் தூக்கி பிடிக்க கூடாது.. கோட்சேவை யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லை.

சத்தியமாக வீரலட்சுமி எனக்கு யார் என்று தெரியாது. திமுக நீட் தேர்வை ஒரு நாடகமாக நடத்தி வருகிறது. நீட்டுக்கு வெள்ளை அறிக்கை வேண்டும் என மூன்று ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். திமுக 50 லட்சம் கையெழுத்தை வாங்க முடியவில்லை என்றால் கட்சியை மூடி கொள்ள வேண்டும்

சங்கர் ஐய்யா நாங்கள் அதிகம் மதிக்க கூடிய ஒருவர். மேலும்  பிரதமர் மோடி நான்காவது முறையும் பிரதமராக வருவார். பயணம் என்பது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். நீட் தற்கொலைகளுக்கு முதல் குற்றவாளி முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டாவது குற்றவாளி உதயநிதி. பூஜ்யம் என காட்டுவதற்காக உதயநிதி முட்டையை கையில் எடுத்துள்ளார்.. இது சிறுபிள்ளைத்தனமான அரசியல்

ஜீரோ அறிவு இருந்தால் முன்னேறிவிடலாம் என்பதை காட்டுவதற்காக முட்டையை கையில் எடுத்துள்ளார் உதயநிதி. மேலும் பாஜகவிற்கு யாரோடும் தொடர்பில்லை மக்களோடு மட்டுமே தொடர்பு. தமிழர் ஒருவரை பிரதமராக நிறுத்துவதற்கு பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சியில் இருக்க வேண்டும்

இலங்கை தமிழர் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி எவ்வளவு பாடுபட்டுள்ளார் என்பது சீமான் அண்ணனுக்கு தெரியும். மேலும் கௌதமி அக்காவை பொறுத்தவரை பிரதமர் மோடிக்கான ஆதரவு எப்போதும் இருக்கும்.. சொத்து பிரச்சனை தொடர்பாக அவர்கள் மன உளைச்சலில் இருக்கிறார்கள்.. அவரிடம் நேரடியாக சந்தித்து பேசினேன்

தேர்தலுக்கு முன் இருக்கின்ற ஏழு மாத காலத்தை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கின்றேன். ஆர் எஸ் எஸ் வளர்ச்சிக்கு இரண்டு ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தான் முயற்சி எடுத்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆர் எஸ் எஸ் இல் சேர்வர்களுடைய எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது

ஹமாஸ் என்பது உலகத்தின் மோசமான தீவிரவாத அமைப்பு. ஆரியர், திராவிடர் என்பது ஒரு குப்பை தொட்டி. திமுகவிற்கு திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது. என்னைப் பொருத்தவரை இந்தியாவில் ஆரியர்கள் என்று யாரும் இல்லை. முதல்வர் ஆரியர்களுக்கு எதிரி என்றால் இந்திய கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும்.