செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 7 அக்டோபர் 2020 (10:51 IST)

முன் கூட்டியே ரிலிஸாக உள்ளதா மாஸ்டர் திரைப்படம்! குழப்பத்தில் படக்குழு!

மாஸ்டர் படத்தினை முன்கூட்டியே ரிலிஸ் செய்யலாமா எனப் படக்குழு யோசனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏப்ரல் மாதமே ரிலிஸ் ஆகி இருக்க வேண்டிய மாஸ்டர் திரைப்படம், கொரோனா காரணமாக 5 மாதமாக பெட்டிக்குள் தூங்கிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் அந்த படத்தை 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலிஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் 2020 ஆம் ஆண்டு எந்த விஜய் படமும் ரிலீஸ் ஆகாது என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது மத்திய அரசு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறந்துகொள்ள அனுமதி வழங்கியுள்ள நிலையில் மாஸ்டர் படத்தை முன் கூட்டியே தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாமா என படக்குழு யோசனையில் உள்ளது. ஆனால் விஜய்யோ பொங்கலுக்கு ரிலீஸாகட்டும் என சொல்லியுள்ளாராம். ஏனென்றால் திரையரங்குகளை திறந்ததும் ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகம் உள்ளது. இதனால் மக்கள் கொஞ்சம் இயல்புநிலைக்கு வந்ததும் பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்யலாம் என சொல்லியுள்ளாராம். ஆனால் தயாரிப்பாளருக்கோ நாளுக்கு நாள் வட்டி அதிகமாகிக் கொண்டே செல்வது குறித்த அச்சம் எழுந்துள்ளதாம்.