1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 3 டிசம்பர் 2018 (11:36 IST)

தனுஷ் எனக்கு லவ் ப்ரபோஸ் பண்ணார்: பிரபல நடிகை ஓப்பன் டாக்

மாரி 2 படப்பிடிப்பின் போது நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்களை அறந்தாங்கி நிஷா பகிர்ந்துள்ளார்.
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் தற்போது வெள்ளித் திரையிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் மாரி 2 படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். தனுஷ் எந்நேரமும் துறுதுறுவென இருப்பார். படபடப்பாகத் தான் பேசுவார். தான் ஒரு மிகப்பெரிய நடிகர் என்ற எண்ணம் அவரிடத்தில் துளி அளவும் இல்லை.
படத்தில் ஒரு சீனில் தனுஷ் எனக்கு லவ் ப்ரபோஸ் பண்ணுவார். நான், ரோபோ சங்கர், தனுஷ் இருக்கும் இந்த காட்சி செம காமெடியாக இருக்கும் என கூறினார். மாரி 2  டிசம்பர் 21ந் தேதி வெளியாக இருக்கிறது.