செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 1 டிசம்பர் 2018 (20:27 IST)

ஜோதிகா பட நடிகைக்கு நேர்ந்த கதியை பாருங்க...

மலையாள திரையுலகில் சில வருடங்களுக்கு முன் வெளியான கவ் ஓல்ட் யூ ஆர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகையாக அறியப்பட்டவர்தான் சேதுலட்சுமி ஆவார்.
இந்தப் படம் தான் தமிழில் 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகா நடிப்பில் வெளியானது. மலையாளத்தில் அதே கேரக்டரில் தமிழிலும் நடித்து அசத்தி இருந்தார் சேதுலட்சுமி.
 
தற்போது தன் மகன் கிட்னி பாதிப்புக்கு ஆளானவர் என்பதால் மகனின் உயிரைக்காப்பாற்றுவதற்காக தன் கிட்னியை கொடுக்க முன் வந்தபோது அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் மருத்துவிட்டார்கள்.
 
இந்நிலையில் சேதுலட்சுமி தான் சினிமாவில் சம்பாரிப்பதை மகனின் மருத்துவத்திற்காக செலவிட்டு வருகிறார்.
 
மகனின் இரண்டு கிட்னியும் செயலிழந்துவிட்டதால் கிட்னியின் மாற்று சிகிச்சைக்காக அதிக அள்வில் பணம் தேவைபடுவதால் உதவி செய்ய யாராவது முன்வந்தால் நலம் பயக்கும் என்றூ சேதுலட்சுமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.