1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (15:41 IST)

13 நாளில் மொத்த படத்தையும் முடித்த இயக்குனர்… கோலிவுட்டே ஆச்சர்யம்!

இயக்குனர் ஆர் கண்ணன் தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை வெறும் 13 நாள்களில் படமாக்கி முடித்துள்ளாராம்.

இயக்குநர் ஜோ பேபி இயக்கிய த கிரெட் இந்தியன் கிச்சன் திரைப்படம் Neestream தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றது. சூரஜ் வெஞ்சரமுடு, நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம் மொழி தாண்டியும் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டு தினத்தன்று இந்த படத்தின் முதல் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியானது. விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை வெறும் 13 நாட்களில் முழுப்படத்தையும் படமாக்கி முடித்துள்ளாராம். இதே போல இயக்குனர் ஆர் கண்ணன் தன்னுடைய மற்றொரு ரீமேக் படமான காசேதான் கடவுளடா படத்தையும் 18 நாட்களில் படமாக்கி முடித்துள்ளாராம்.