செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (20:17 IST)

#29YearsOfAjithKumar டிரெண்டாகும் ஹேஸ்டேக் !

நடிகர் அஜித்குமார் சினிமாவில் அறிமுகமாகி 29 ஆண்டுகள் ஆகிறது எனவே இதையொட்டி அவரது ரசிகர்கள் #29YearsOfAjithKumar என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துவரும் வலிமை படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின்  ஷூட்டிங் ரஷ்யாவில் நடத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் இன்று இரவு 10:45 மணிக்கு வலிமை படத்தின் முதல் சிங்கில் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் இசையில் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள பாடல் நாங்க வேற மாறி என்ற பாடலுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும், நடிகர் அஜித்குமார், அமராவதி என்ற படத்தில் அறிமுகமாகி 29 ஆண்டுகள் ஆகிறது எனவே இதையொட்டி அவரது ரசிகர்கள் #29YearsOfAjithKumar என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். அஜித்குமார் காதல் மன்னன், காதல் கோட்டை,  விஸ்வாசம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.