அஜித்-ன் 61 வது பட இயக்குநர் இவர்தான்...தயாரிப்பாளர்?

Sinoj| Last Updated: திங்கள், 19 ஜூலை 2021 (17:00 IST)

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் மீண்டும் ஹெச். வினோத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகத் தகவல்கள் இணையதளத்தில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார் இவர் தற்போது
ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை ஹிந்தி படத் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்
மற்றும் மோஸன் போஸ்டர்
வெளியானது. இந்தியாவில் அதிகப் பார்வையாளர்கள் ( 1 மில்லியனுக்கு மேல்) மற்றும் அதிகம் லைக்ஸ் பெற்ற மோஸன் போஸ்டர் என்ற சாதனை படைத்தது.

இப்படத்தை விரைவில் திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், வலிமை படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித்குமார் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தையும் போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

மேலும், இவர்கள் மூவரின் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை , வலிமை ஆகிய இரண்டுகள் படங்கள் தயாராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.#valimai #ajithkumar #hvinothஇதில் மேலும் படிக்கவும் :