ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (15:47 IST)

27 வருடமா ரஜினியோட நடிக்க முடியல…. இனிமேல் பாக்கலாம் – தேவயானி!

ரஜினி கூட நடிக்க முடியாதது பற்றி நடிகை தேவயானி சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 90 களின் இறுதியில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ரஜினி, கமலை தவிர மற்ற எல்லா நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர். இத்தனைக்கும் அவர் தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக இருந்தார். ஆனாலும் ரஜினி படத்தில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இப்போது அதுபற்றி பேசியுள்ள அவர் ‘ரஜினி படக் கதைகளுக்கு நான் தேவைப்பட வில்லை போல. ஆனால் இனிமேலாவது வாய்ப்புக் கிடைக்குமென்று நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.