திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (14:53 IST)

2022-ல் தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்கள் :

தமிழ் சினிமாவில் 2022 ஆம் ஆண்டில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது,

தமிழ் சினிமா சில ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஏராளமான புதிய படங்களும்,  பெரிய மற்றும் சிறிய பட்ஜெட் படங்களும் வந்துகொண்டிருக்கின்றன.

அதுமட்டுமின்றி, ஓடிடி, உள்ளிட்ட டிஜிட்டல் தளங்களிலும்  படங்கள் ரிலிஸாகி வருகின்றனர். அதிலும் இந்த ஆண்டு வெளியான படங்களில் வலிமை, பீஸ்ட், விக்ரம் படங்களுக்குப் பின் திருச்சிற்றம்பலம் அதிக வசூலீட்டியுள்ளன.

அதன்படி, முதல் நாளில் அதிக வசூலீட்டிய படங்களின் பட்டியலில் 1. வலிமை, 2. பீஸ்ட், 3. விக்ரம், 4. கோப்ரா, 5.திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கலவையான விமர்சனம் பெற்றுள்ள விக்ரமின் கோப்ரா படம் முதல் நாளில் ரூ.9.28 கோடியும், 2 ஆம் நாளில் 2.56 கோடி என  2 நாட்களில் மட்டும் 11.84 கோடி வசூலீட்டியுள்ளது.

இந்த ஆண்டில் வெளியான இந்திப் படங்கள் எல்லாம் படுதோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.