‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் எத்தனை பாடல்கள்: டிராக்லிஸ்ட் ரிலீஸ்!
சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இன்று வெளியாக உள்ளது.
இதற்காக பிரமாண்டமான அரங்குகள் தயாராக இருப்பதாகவும் இந்த விழாவில் கமல்ஹாசன் மற்றும் உதயநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
இந்த நிலையில் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் சற்றுமுன் வெளியாகி உள்ளது இதனை அடுத்து இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்த ஐந்து பாடல்களில் இரண்டு பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார் என்பதும் ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்துள்ளனர்.