1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 26 நவம்பர் 2018 (12:31 IST)

கஜா புயல் பேரிடர் தான்: மத்தியக் குழு அதிகாரிகள் தகவல்

கஜா புயல் பாதிப்பு பேரிடர் தான் என புயல் பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சீரழிந்து போயுள்ளன. அந்த மாவட்ட விவசாயிகள் கிட்டதட்ட 10 வருடங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளனர். தங்கள் வாழ்வாதாரங்களான தென்னை, பனை, வாழை, சவுக்கு, மா, பலா மரங்களை பறிகொடுத்து வாழ வழியின்றி நிற்கதியாய் தவிக்கின்றனர். மீளா துயரத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் பாதிப்புகளை பார்வையிட தமிழகம் விரைந்துள்ள மத்திய குழு 3 வது நாட்களாக தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அவர்களிடம் கண்ணீர்மல்க இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
 
இதுகுறித்து பேசிய  மத்தியக் குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்ட், மக்கள் பலர் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு எவ்வாறு ஆறுதல் கூறுவது என்று தெரியவில்லை. இந்த இழப்புப் பேரிடராக தான் உள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் அறிக்கை அளித்து போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.