செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 26 நவம்பர் 2018 (11:55 IST)

24 நாட்கள் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்: மபியில் கோரம்

மத்தியபிரதேசத்தில் 2 லட்சத்திற்கு விற்கப்பட்ட இளம்பெண் ஒருவர் 24 நாட்கள் அடைக்கப்பட்டு கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன் கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். 
 
இந்நிலையில் வேலை தேடிக்கொண்டிருந்த அவருக்கு புவராஜ் என்பவன் போன் செய்து, இந்தூரில் ரூ. 15,000 சம்பளத்திற்கு வேலை இருப்பதாகவும் தன்னை நேரில் வந்து சந்திக்கும்படியும் கூறியுள்ளான். இதனை நம்பிய அந்த பெண் யுவராஜை நேரில் சந்தித்தார்.
 
பின்னர் யுவராஜ், அந்த இளம்பெண்ணை ஒரு மாற்றுத் திறனாளியிடம்(காது மற்றும் வாய் பேச முடியாதவரிடம்) 2 லட்சத்திற்கு விற்றுள்ளான். அங்கு அந்த பெண் 24 நாட்கள் மிரட்டப்பட்டு கற்பழிக்கப்பட்டுள்ளார். அந்த நபர் வெளியே சென்ற போது அந்த பெண் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அந்த பெண்ணை மீட்டனர். மேலும் அந்த பெண்ணை இந்த நிலைக்கு ஆளாக்கிய யுவராஜையும் அந்த மாற்றுத் திறனாளியையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.