12 வருடங்களை கடந்து டாப் ஹீரோயினாக ஜொலிக்கும் அழகு தேவதை காஜல்!

VM| Last Updated: வியாழன், 14 பிப்ரவரி 2019 (18:04 IST)
காஜல் அகவர்வால் முதல்முதலாக நடித்தது பாலிவுட் படமான  குயான் கோ கயானா(2004) என்றாலும், காஜல் அகர்வால் முதல் முதலாக ஹீரோயினாக நடித்த படம் லட்சுமி கல்யாணம்.தெலுங்கு படமான இது  2007ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி வெளியானது.   இந்த படத்தில் நந்தமுரி கல்யாண்ராமுக்கு ஜோடியாக அப்பாவி கிராமத்து பெண் வேடத்தில் காஜல் அகர்வால் நடித்திருப்பார்.
 
இவரது நடிப்பிலும் அழகிலும் சொக்கிப்போன தெலுங்கு  நடிகர்களும் தயாரிப்பாளர்களும் காஜல் அகர்வாலையே தங்கள் படத்தில் புக் செய்ய குவிந்தனர்.


 
இந்நிலையில் காஜலுக்கு தெலுங்கு சினிமா ராணியாக மகுடம் சூட்டியது போல் 2009ம் ஆண்டு வெளியானது மகதீரா. ராம் சரண் தேஜாவுக்கு ஜோடியாக இளவரசி வேடத்தில் நடித்திருப்பார் காஜல்.  இந்த படத்துக்கு பின்  அவருக்கு மார்க்கெட் உச்சம் பெற துவங்கியது. தெலுங்கில் டார்லிங், பிரிந்தாவனம், மிஸ்டர்.பர்பெக்ட், பிஸிசனஸ்மேன், நாயக், பாட்ஷா, கோவிந்துடு அந்தரிவாடில்லே, டெம்பர், கைதி நமபர் 150 எனற தெலுங்கில் உச்சம் பெற்றார்.
 
இடையில்  2009ம் ஆண்டு மகதீரா படத்தை பார்த்து வியந்து போன தமிழ் நடிகர்கள் காஜலை புக் செய்ய ஆரம்பித்தனர்.  இதனால் நான் மாகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, விவேகம், மெர்சல், என அடுத்தடுத்து தமிழிலும் டாப் நடிகையாக உயர்ந்துவிட்டார். தற்போது காஜல் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் படம் உருவாகி உள்ளது. இந்த படம் வரும் பிப்ரவரி 22ம் தேதி வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
 
துப்பாக்கியில் விஜய்க்கு அடுத்தபடியாக சிறப்பாக பேசப்பட்டவர் என்றால் அது காஜல் தான். இதேபோல் பிசினஸ்மேன் படத்திலும் மகேஷ்பாபுக்கு ஜோடியாக சிறப்பாக நடித்திருப்பார். விவேகம் படத்தில் காஜல் நடிப்பு மிக அற்புதமாக இருக்கும். 
 
தனக்கு என்ன மாதிரியான ரோல் செட் ஆகும் என்பதை உணர்ந்து சரியானவற்றை தேர்ந்தெடுப்பதில் காஜல் எப்போதுமே வல்லவர். 
 
டாப் ஹீரோயினாக தமிழில் காஜல் மாறிவிட்டாலும்,  இப்போதுவரை தமிழ் பேச தெரியாது.  ரிஸ்க் இல்லாத சரியான கதைகளை தேர்ந்தெடுப்பது, அளவுக்கு மீறி கவர்ச்சி காட்டாமல் இருப்பது, குடும்பப்பாங்கான வேடங்களில் தேர்ந்தெடுத்து நடிப்பது உள்ளிட்டவை தான் இன்னும் டாப் ஹீரோயினாக காஜல் ஜொலிக்க காரணம். 


 
குழந்தைத்தான சிரிப்பு, பார்த்தவுடன் மயக்கும் தோற்றம் இவை தான் ரசிகர்களை காஜல் பக்கம் திருப்பியது.. முதல் படத்தில் இருந்து இப்போது வரை அதனை அப்படியே 12 வருடங்களாக பின்பற்றி வருகிறார் காஜல். 


இதில் மேலும் படிக்கவும் :