1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 21 அக்டோபர் 2020 (20:30 IST)

மேக்னா ராஜின் குழந்தைக்கு 10 லட்சம் மதிப்பிலான தொட்டில்…

சமீபத்தில் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் வளைகாப்பு நடத்தினார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில் பிறக்கப்போகும் தனது அண்ணனின் குழந்தைக்காக மறை சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பி, நடிகர் துருவ சார்ஜா ரூ.10 லட்சம் மதிப்பில் வெள்ளித்தொட்டில் வாங்கி வீட்டில் வைத்து உள்ளார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.
 

மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர். சிரஞ்சீவி சார்ஜா இறந்த போது மேக்னா ராஜ் தற்போது கர்ப்பிணியாக இருந்தார். மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கவேண்டும் என சிரஞ்சீவி சார்ஜா அவ்ளளவு ஆசைபட்டார். ஆனால், தற்ப்போது அவர் குழந்தையாகவே மனைவியின் கர்ப்பத்தில் மறு உயிர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில்  மேக்னா ராஜிற்கு அவரது குடும்பத்தினர் வளைகாப்பு நடத்தியுள்ளனர். அதில் அவர் கணவரின் கட் அவுட்டை வைத்து புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டார். அந்தப்புகைப்படங்கள் இணையதளத்தில்  வைரலானது.

இந்நிலையில் பிறக்கப்போகும் தனது அண்ணனின் குழந்தைக்காக மறை சிரஞ்சீவி சார்ஜாவின் தம்பி, நடிகர் துருவ சார்ஜா ரூ.10 லட்சம் மதிப்பில் வெள்ளித்தொட்டில் வாங்கி வீட்டில் வைத்து உள்ளார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.