துப்பறியும் டிராபிக் போலிஸ்… சிபிராஜ் நடித்துள்ள கபடதாரி டிரைலர் ரிலீஸ்

Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (17:11 IST)

சிபிராஜ் நடித்துள்ள கபடதாரி படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் சிபிராஜ் நடித்து வந்த ’கபடதாரி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் கோ தனஞ்செயன் தயாரித்துள்ளார். இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் டீசரை சில வாரங்களுக்கு முன்னர். இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இந்த டீசரை டிவிட்டரில் வெளியிட்டார். டிராபிக் போலீஸாக பணியாற்றும் சிபிராஜ் ஒரு கொலை குறித்த விசாரணையில் ஈடுபட்டு அதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதை என்பது போல அமைந்துள்ளது டிரைலர். நீண்ட நாட்களாக ஹிட் கொடுக்க முடியாமல் போராடி வரும் சிபிராஜுக்கு இந்த படம் திருப்பு முனையாக அமையும் என சொல்லப்படுகிறது.

அதையடுத்து இன்று இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு இந்த படம் ஜனவரி 28 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் மேலும் படிக்கவும் :