மீண்டும் இந்தியா வந்து இந்திய நடிகர்களுடன் பணியாற்றுவேன் – கிறிஸ்டோபர் நோலன் ஆர்வம்!

Last Modified செவ்வாய், 12 ஜனவரி 2021 (16:50 IST)

கிறிஸ்டோபர் நோலன் மீண்டும் இந்திய நடிகர்களுடன் பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

டார்க் நைட், இன்செப்ஷன் மற்றும் இண்டர்ஸ்டெல்லார் போன்ற தன்னுடைய படங்களின் மூலம் உலக சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இப்போது டெண்ட் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் டைம் ரிவர்ஸிங் என்ற அறிவியல் கருத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படம் கொரோனா காரணமாக நீண்ட கால தாமதத்துக்குப் பின் உலகமெங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தின் சில காட்சிகளை இந்தியாவில் மும்பையில் படமாக்கினார் நோலன். அதுமட்டுமல்லாமல் பாலிவுட் நடிகை டிம்பிள் கப்பாடியா இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியாவில் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது எனக் கூறியுள்ள நோலன் ‘மீண்டும் இந்தியா வந்து இந்திய நடிகர்களோடு பணியாற்ற ஆவலாக இருக்கிறேன். பாலிவுட் இயக்குனர்களை சந்தித்தது மகிழ்ச்சியான அனுபவம்’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :