1. இதர வாசிப்பு
  2. »
  3. அறுசுவை
  4. »
  5. இனிப்புகள்

அரிசி பருப்பு பாயசம்

அரிசி பருப்பு பாயசம்
சே‌மியா பாயாச‌ம், அவ‌ல் பாயாச‌ம் போ‌ன்று அரிசி + பயத்தம் பருப்பு பாயசம் எ‌ன்பது ‌மிகு‌ந்த சுவையானது‌ம், செ‌ய்ய எ‌ளிதானது‌ம் ஆகு‌ம்.

எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியவை

அரிசி - 100 கிராம்
பயத்தம் பருப்பு - 50 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
பால் - 250 கிராம்
நெய் - 15 கிராம்
மு‌ந்‌தி‌ரி - 50 ‌கிரா‌ம்
தண்ணீர் - 250 மி.லி.

செ‌ய்யு‌ம் முறை

அரிசி ம‌ற்று‌ம் பருப்பை தனித் தனியே கழுவிச் சுத்தம் செய்து கொள்ள உலர வை‌த்து ‌விட வே‌ண்டு‌ம்.

இரண்டையும் தனித் தனியாக, பொன்னிறமாக வறுத்து, இர‌ண்டையு‌ம் ஒ‌ன்‌றிர‌ண்டாக ‌அரை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

‌பி‌ன்ன‌ர் ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் இர‌ண்டையு‌ம் போ‌ட்டு தேவையான அளவு ‌நீ‌‌‌ர் ‌வி‌ட்டு கொதிக்க விட வே‌ண்டு‌ம்.

அ‌ரி‌சியு‌ம், பரு‌ப்பு‌ம் கல‌ந்து ந‌‌ன்கு வேக வே‌ண்டு‌ம்.

வெ‌ந்து கூழானது‌ம், பாலையும் சர்க்கரையையும் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும்.

‌நெ‌ய்யை‌க் கா‌ய்‌ச்‌சி அ‌தி‌ல் மு‌ந்‌தி‌ரியை‌ப் போ‌ட்டு பொ‌ன்‌னிறமாக வறு‌த்து பாயச‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌‌ள்ளலா‌ம்.

அ‌வ்வளவுதா‌ன் சுவையான அரிசி - பயத்தம் பருப்பு பாயசம் ரெடி!