கோடை காலத்தில் சூவையான பலாப்பழ பாயாசம் செய்வது எப்படி?.
கோடைக்கால சீசனில் கிடைக்கும் பழங்களில் பிரபலமான பழமாக பலாப்பழம் உள்ளது. அதிக இனிப்பு சுவையுடனும் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாகவும் பலாப்பழம் இருக்கிறது. மேலும் பல்வகை சத்துக்கள் நிரம்பியுள்ளதால் இது உடலுக்கு அதிக நன்மைகளை வழங்குகிறது.
பலாப்பழத்தை கொண்டு பல வித உணவுகள் செய்யப்படுகிறது. அதில் சுவையான பாயாசம் எப்படி செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
• பலாப்பழம் – 150 கிராம்
• தேங்காய் பால் – 1 கப்
• வெல்லம் – 100 கிராம்
• நெய் – 2 டேபிஸ் ஸ்பூன்
• ஏலக்காய் – 3 முதல் 4
• முந்திரி, பாதாம், பிஸ்தா - தேவையான அளவு
செய்முறை:
• கிண்டுவதற்கு ஏதுவாக ஒரு பாத்திரத்தை எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதில் வெல்லம் சேர்த்து நன்கு கரைய வைக்கவும்.
• பலாப்பழ துண்டுகளை நன்கு மசிய வைத்துவிட்டு அதை வெல்ல கரைசலில் சேர்க்கவும். அது வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து இறக்கி வைக்கவும்.
• பிறகு தனியாக ஒரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி அதில் ஏலக்காயை சேர்க்கவும். அந்த கலவையை அப்படியே பலாப்பழ பாயாசத்தில் சேர்க்கவும்.
• பிறகு மிதமான சூட்டில் பாயாசத்தை 5 நிமிடங்கள் வேகவைக்கவும். இறுதியாக இறக்கும்போது அதில் முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை சேர்க்கவும்.
இப்போது சுவையான பலாப்பழ பாயாசம் தயார். பலாப்பழம் இனிப்பு அதிகமாக இருந்தால் வெல்லத்தை குறைவாக சேர்த்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு மாலை வேளைகளில் கொடுக்க நல்ல திண்பண்டமாக இது இருக்கும்.