Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த பால் கொழுக்கட்டை செய்ய !!

Written By Sasikala
Updated: சனி, 8 ஜனவரி 2022 (15:09 IST)
தேவையான பொருட்கள்:
 
புழுங்கல் அரிசி மாவு - 2 கப்
தேங்காய்ப்பால் (முதல் பால்) - 1 கப்
தேங்காய்ப்பால் - (இரண்டாம் பால்)தேவைக்கு ஏற்ப
பால் - 3 கப்
சர்க்கரை - 2 1/2 கப்
ஏலக்காய் - 4
முந்திரி, திராட்சை - தேவைக்கு ஏற்ப
நெய் - 5 டீ ஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை:
 
பாலை நன்றாகக் காய்ச்சவும். அரிசி மாவில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் தனியே எடுத்துவிட்டு மீதமுள்ள மாவில் காய்ச்சிய பாலை விட்டு, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். சிறிது உப்பு சேர்க்கவும்.
 
பிசைந்த மாவைச் சிறுசிறு உருண்டைகளாக நீண்ட வடிவத்தில் பிடித்து, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
 
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு, இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப்பாலை ஊற்றி, சர்க்கரை கரைய வைத்து நீர்த்த பாகாக்கவும். பிறகு எடுத்து வைத்த அரிசி மாவை சேர்த்துக் கலக்கி கொதிக்க விடவும். சிறிது கெட்டியாக பாயசம் போலவரும், இச்சமயம் ஆவியில் வேக வைத்ததைப் போட்டு கிளறிவிடவும்.
 
பின்னர், பால், தேங்காய்ப்பால் இரண்டையும் ஊற்றி ஒரு கொதி வந்ததும் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துப் போட்டு, ஏலக்காயைப் பொடி செய்து போட்டு,  நெய்யையும் ஊற்றி மூடி வைக்கவும். சாப்பிட ருசியான பால் கொழுக்கட்டை தயார்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments