1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சுவை மிகுந்த அத்திக்காய் கிரேவி செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
பொடியாக அரிந்த அத்திக்காய் - 1 கப்
வெங்காயம் - தலா 1
தக்காளி - தலா 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
அரைத்த கசகசா - 1 டீஸ்பூன் (வெறும் கடாயில் வறுத்து வைக்கவும்
தனியா - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 5 பல்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கொத்தமல்லித்தழை - 1 கட்டு.

செய்முறை:
 
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரிந்த வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அத்துடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, அத்திக்காயைப் போட்டு வதக்கவும். காய் வெந்ததும் அரைக்க கொடுத்த பொருட்களை விழுதாக அரைத்துச் சேர்க்கவும். 
 
நன்கு வதக்கி, தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக கடலை மாவை கரைத்து இந்த கிரேவியில் ஊற்றவும். கிரேவி திக்காகவும், தனி சுவையுடனும் இருக்கும். சுவை மிகுந்த அத்திக்காய் கிரேவி தயார்.