Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி பலகாரம் சோன் பப்டி செய்வது எப்படி....?

Written By Sasikala
Updated: வியாழன், 24 அக்டோபர் 2019 (17:21 IST)
மைதா - 1 1/2 கப் 
பால் - 2 டேபிள் ஸ்பூன் 
சர்க்கரை - 2 1/2 கப் 
ஏலக்காய் பவுடர் - 1 டீஸ்பூன் 
தண்ணீர் - 1 1/2 கப் 
பாலிதீன் ஷீட் - 1 
நெய் - 250 கிராம்
செய்முறை:
 
ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் மைதா மாவை நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்  நெய்யை ஊற்றி நன்கு சூடானதும், மெதுவாக அந்த மாவை போட்டு, லேசாக பொன்னிறத்தில் வரும் போது இறக்கி விடவும். 
 
பின் அதனை குளிர வைக்க வேண்டும். அதே சமயம், ஒரு வாணலியில் தண்ணீரை ஊற்றி, சர்க்கரை மற்றும் பாலை ஊற்றி, சற்று  கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க விடவும். அந்த பாகு கெட்டியானதும் இறக்கி, அதனையும் குளிர வைக்க வேண்டும். பின் ஒரு தட்டை  எடுத்துக் கொண்டு, அதில் நெய்யை தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பிறகு குளிர வைத்துள்ள மாவை, சர்க்கரை பாகுவுடன் கரண்டியை வைத்து கிளற வேண்டும். அவ்வாறு கிளறும் போது நீளநீளமாக மாவானது  சுருளும். அதுவும் குறைந்தது 1 இன்ச் நீளத்தில் இருக்குமாறு கிளற வேண்டும். பின் அதனை அந்த தட்டில் ஊற்றி, அதன் மேல் ஏலக்காய்  பவுடரைத் தூவி, குளிர வைக்க வேண்டும்.

பின்னர் அதனை சதுர வடிவத் துண்டுகளாக்கி, பாலிதீன் ஷீட்டில் வைத்து, அதன் மேல் பாதாம்  மற்றும் பிஸ்தாவை வைத்து அலங்கரித்து, சுற்றி வைக்க வேண்டும். இப்போது சூப்பரான சுவையான சோன் பப்டி தயார்.

எல்லாம் காட்டு

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments