புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

தேங்காய்பால் அரிசி பாயாசம் செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
தேங்காய் - ஒன்று (பெரியது)
பச்சரிசி - அரை ஆழாக்கு
ஏலக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
வெல்லம் - கால் கிலோ
காய்ந்த திராட்சை - 10 கிராம்
முந்திரி - 10 கிராம்

செய்முறை: 
 
சிறிது நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும். தேங்காயில் மூன்று முறை பாலெடுத்து தனித்தனியே வைத்து கொள்ளவும். மூன்றாவது தேங்காய்ப்பாலை கொதிக்க வைத்து அரிசி கழுவி வேக விடவும்.
 
நன்கு வெந்ததும் வெல்லத்தை சிறிது தண்ணீர் தெளித்து கரையவிட்டு வெந்த அரிசியில் கொட்டவும். கொதித்ததும் இரண்டாவது பாலை ஊற்றி முந்திரி, திராட்சை,  ஏலக்காய்ப்பொடி போட்டு முதல் பாலை ஊற்றி கொதி வந்தவுடன் இறக்கவும்.