வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 நவம்பர் 2023 (10:58 IST)

தீபாவளி ஸ்பெஷல்: கிராமத்து சுவையில் அதிரசம் செய்வது எப்படி?

Adhirasam
தீபாவளிக்கு சுடப்படும் பலகாரங்களில் கிராமங்களில் முக்கியமான இடத்தை பிடிப்பது முறுக்கும், அதிரசமும்தான். அப்படியான கிராமிய மணம் கமழும் சுவையான அதிரசத்தை செய்வது எப்படி என பார்ப்போம்.



தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
வெல்லம் - 3/4 கப்
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு தேக்கரண்டி

செய்முறை:

பச்சரிசியை கழுவி தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும். ஊறீயதும் தண்ணீரை நன்கு வடித்து விட்டு ஒரு துணியில் 20 நிமிடம் நிழலில் காய விடவும். பிறகு  அந்த அரிசி லேசாக ஈர பதமாக இருக்கும் போதே மிக்சியில் நன்றாக பொடித்துக் கொள்ளவும். கொஞ்சம் கொஞ்சமாக அரைத்தல் நன்றாக பொடியாகும்.

பொடித்த மாடை சல்லடையால் சலித்து கொல்லவும். அதோடு ஏலக்காய் பொடியை சேர்க்கவும். அடுப்பில் கடாயை வைத்து பொடித்த வெல்லத்தை போடவும்.  அதனுடன் சிறிதலவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும். மீண்டும் வடிகட்டிய பாகை காய்ச்சவும். தீயை மிதமாக வைத்துக்  கொள்ளவும்.

பாகு பதம் தான் அதிரசம் செய்வதற்கு முக்கியமான ஒன்று. பதத்தை தெரிந்து கொள்வதற்கு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். வெல்லம்  நன்றாக கொதித்ததும் சிறிது எடுத்து பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். பாகு எப்போது தண்ணீரில் கரையாமல் மெதுவான பந்து போல உருட்ட முடிகிறதோ அது தான்  உருட்டு பதம்.

உருட்டு பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு பாகை அரிசி மாவின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டி வைத்து நன்கு கிளறவும். இரண்டும் நன்றாக  சேரும் வரை கிளறவும். அந்த மாவை மூடி வைத்து ஒரு நாள் முழுதும் ஊற வைக்கவும். அடுத்த நாள் மாவு கொஞ்சம் கெட்டியாக அதிரசம் போடுவதற்கு ஏற்றது  போல் இருக்கும்.

ஒரு வாழை இழை அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளவும். ஒரு எலுமிச்சை அளவு மாவை எடுத்து உருட்டி கவரில் வைத்து வட்டமாக தட்டி கொள்ளவும்

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய்யை சூடாக்கவும். நன்றாக சூடானது தீயை மிதமாக வைத்து தட்டி வைத்துள்ள மாவை எடுத்து போடவும். ஒரு புறம்  சிவந்ததும் திருப்பி போடவும். மறு புறம் சிவந்ததும் எடுத்து டிஸ்யு பேப்பரில் போடவும். அதிரசம் சீக்கிரமாக வெந்து விடும் அதனால் ஒரு ஒரு அதிரசமாக  பொரித்து எடுக்கவும். சுவை மிகுந்த அதிரசம் தயார்.