சுவையான ரவா இனிப்பு பணியாரம் செய்வதற்கு...!

தேவையான பொருட்கள்:
 
ரவா - 1 கப்
மைதா - 1கப்
சர்க்கரை - 1.5 கப்
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
செய்முறை:
 
ரவையை தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின் அதில் மைதாவையும், சர்க்கரையையும் கலந்து ஒரு திக்கான கலவையாக்கிக் கொள்ளவும். சர்க்கரை நன்கு கரையும்வரை கலக்க வேண்டும். கட்டி இல்லாமல் கலக்க வேண்டும்.
 
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரவை மைதா கலந்து வைத்துள்ள கலவையை ஒரு குழியான ஸ்பூனால் எடுத்து கொதிக்கும் எண்ணெயில் ஊற்றி நன்கு சிவந்து ப்ரௌன் நிறம் வந்ததும் எடுத்து தட்டில் வைத்து பறிமாறவும்.
 
குழந்தைகள் இதை மிகவும் விரும்பி உண்பார்கள். மிக எளிதாகவும் செய்திடலாம்.


இதில் மேலும் படிக்கவும் :