வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அ‌றிவோ‌ம்
Written By சுரேஷ் வெங்கடாசலம்
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2016 (20:26 IST)

குறட்டையும் அதை தவிர்க்கும் சில வழிமுறைகளும்

பெரும்பாலான வீடுகளில் குறட்டை ஒலி தெருவரையில் கேட்கும். இதனால் வீட்டில் உள்ள மற்றவர்கள் தூங்க முடியாமல் துன்புறுவதைக் காணலாம்.


 

 
தங்கள் வீட்டின்  குறட்டை கதைகளை தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது, கிண்டலும், சிரிப்புமாக  இருப்பதைப் பார்க்க முடியும்.
 
நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, குறட்டை சத்தம் உருவாகிறது. இந்த குறட்டை சத்தத்தை மற்றவர்களால் கேட்க முடியும். ஆனால், குறட்டை விடுபவருக்கு அந்த சத்தம் கேட்பதில்லை.
 
நாம் தூங்கும் போது, நமது வாயின் மேல் பகுதியிலுள்ள தசைகள் மற்றும் தொண்டைப் பகுதி ஆகியவையும் ஓய்வு எடுக்கத் தொடங்குகிறது.
 
இதனால், அந்த தசைகள் தளர்ந்து விடுகின்றன. இந்நிலையில், மூச்சுக் குழாய் தற்காலிகமாக அடைபடுகிறது.
 
இவ்வாறு அடைபட்டுள்ள மூச்சு குழய் வழியாக மூச்சுக் காற்றுவெளியேறும்போது, இந்த அடைப்பின் வழியாக காற்று வெளியேறவேண்டியுள்ளளது.
 
இதுனால் சத்தம் ஏற்படுகிறது, இதைத்தான் நாம் குறட்டைச் சத்தம் என்கிறோம். இந்த குறைட்டைச் சத்தம் மற்றவர்களின் தூக்கத்தையும் நிம்மதியையும் பாதிப்பதால் இதை தவிர்க்கவேண்ம் என்று பெரும்பாலானவர்கள் முயல்கின்றனர்.
 
இந்த குறட்டையை தவிர்க்கும் சில வழிமுறைகள்:-
 
நாம் தூங்கும்போது தலையணையை உயரமாக வைத்துக்கொள்வதைத் தவிக்க வேண்டும்.
 
சில வகை ஒவ்வாமை காரணமாக சுவாசக்குழாயில் ஏற்படும் சளியால் குறட்டை ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே ஒவ்வாமை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
 
குறட்டை விடுபவர்கள் ஒருபுரமாக திரும்பிப்படுப்பதால் குறட்டை சத்தம் குறைவதாக கூறப்படுகிறது. எனவே மல்லாக்க படுப்பதை தவிர்க்கலாம்.
 
இந்நிலையில், குடும்பத்தில் உள்ளவர்கள் இந்த குறட்டையை தொல்லையானதாகக் கருதாமல், இந்த சத்தத்துடன் தூங்கிப்பழக முயற்சி செய்யலாம். இது இருதரப்பு அன்பையும் மேம்படுத்த உதவும்.