செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அ‌றிவோ‌ம்
Written By
Last Updated : புதன், 2 மே 2018 (18:50 IST)

பணக்காரர்களே அதிகம் குடிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்

அதிகம் பணம் சம்பாதிப்பவர்கள் அதிகம் குடிப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று ஆய்வில் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

 
குடிபழக்கம் உடல்நலத்திற்கு கேடு என்றும் ஆயுளை குறைக்கும் என்றும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. அதே வேளையில் அளவோடு குடிப்பது உடல்நலத்திற்கு நல்லது என்றும் சில ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் தினமும் குடிக்க விரும்பம் உள்ளவர்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் தகவல் மிகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. அதில் மற்ற நாடுகளை விட அமெரிக்கர்களே அதிகம் குடிப்பவர்களாக இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறிப்பாக மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் தினமும் குடிப்பவர்கள் பட்டியலில் உள்ளனர். அதிகம் பணம் சம்பாதிப்பவர்களே அதிகம் குடிப்பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
இளைஞர்கள் மற்றும் குறைவாக சம்பாதிப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறை, வார இறுதி என்றுதான் குடிக்கிறார்கள். ஆனால், அதிகம் சம்பாதிப்பவர்கள் தினமும் அதிகளவில் குடிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.