வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அ‌றிவோ‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 20 செப்டம்பர் 2017 (21:46 IST)

புகை ஏன் மேல் நோக்கி செல்கிறது? அறிவியல் பயில்வோம்...

புகை ஏன் மேல் நோக்கி நகர்கிறது என்பதற்கான காரணத்தை நீங்கள் சிந்தித்துண்டா? இதன் பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்.


 

 
நெருப்பினால் இருவாகும் புகையானது சிறிய அளவில் இருந்தாலும் அல்லது பெரிய அளவில் இருந்தாலும் மேல் நோக்கியே நகரும் இதற்கு பின்னணியில் அறிவியல் சார்ந்த காரணம் ஒன்று உள்ளது.
 
பூமியை நிரப்பியுள்ள காற்றின் அடர்த்தி, புகையின் அடர்த்தியை விட அதிகமானது. புகையும் காற்றின் ஒரு விதம்தான் இன்றாலும் இரண்டின் அடர்த்தியிலும் வேறுபாடுகள் உள்ளன.
 
இதனால் புகையை விட காற்றின் மீதன புவி ஈர்ப்பு அதிக அளவில் இருக்கும். அப்போது காற்று கீழ் நோக்கியும், புகை மேல் நோக்கியும் பயணிக்கும்.
 
புகையை போலதான் நீராவியும் குறைவான அடர்த்தியை உடையது. எனவேதான், நீராவி மேல் நோக்கி சென்று மேகமான மாறி மழையை பொழிகிறது.