தொடர்புடைய செய்திகள்
- ஜெயலலிதா மரணத்திற்கு யார் காரணம்? ஜெயகுமார் கிளப்பிய சர்ச்சை!
- "தலைவி" இந்திய சினிமாவில் முக்கியமான படமாக அமையும் - ஜீ வி பிரகாஷ்!
- "தலைவி" ஜெயலலிதா வாழ்வின் நல்ல தருணங்களை சொல்லும் - மதன் கார்கி!
- கங்கனாவுக்குள் அம்மாவின் ஆவி புகுந்துவிட்டது - சமுத்திரக்கனி!
- கங்கனாவுக்கு ரொம்ப திமிரு: "தலைவி" ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தம்பி ராமையா பேச்சு!
ஜெயலிதாவை போன்றே கங்கனா தலைவி ஆவார் - விஜயேந்திர பிரசாத் புகழாரம்!
தமிழகத்தின் தங்கத்தாரகை, மகளிரின் ஆதர்ஷமாக வாழ்ந்த, புரட்சி தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கையை சொல்லும் படமாக, உருவாகும் தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு, இன்று படக்குழு மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொள்ள மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத்...
தலைவி எனக்கு ஒரு மிகச்சிறப்பான பயணமாக இருந்தது. படத்தை பற்றி அவர்கள் தந்த தகவல் தொகுப்புகள், பிரமிக்க தக்க வகையில் இருந்தது. நடிகை கங்கனா எனக்கு ஜெயலலிதா பற்றி அதிகம் தெரியாது, நான் எப்படி தயாராவது என்று கேட்டார்.
நீங்கள் நீங்களாக இருங்கள் போதும் என்று சொன்னேன். யாருக்கும் தலைவணங்காத, சுயமதிப்பு கொண்ட, இரும்பு பெண்மணி ஜெயலலிதா. கங்கனாவும் அதே போன்றவர் தான். தேசிய விருதை வென்றுள்ளார் தலைவி படத்தலைப்பு போல் ஒரு நாள் அவரும் தலைவியாக வாழ்த்துக்கள்.
