ஞாயிறு, 15 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: புதன், 4 ஜனவரி 2017 (11:10 IST)

கொலைக்கு சாட்சியாகும் புறா - பி.வாசு சுவாரஸிய பேட்டி

கொலைக்கு சாட்சியாகும் புறா - பி.வாசு சுவாரஸிய பேட்டி
கன்னடத்தில் பி.வாசு இயக்கி பெரும் வெற்றியை பெற்ற படம், சிவலிங்கா. அதனை அதே பெயரில் ராகவா லாரன்ஸை வைத்து  தமிழில் எடுத்துள்ளார். இம்மாத இறுதியில் படம் திரைக்கு வரும் நிலையில், பத்திரிகையாளர்களை பி.வாசு சந்தித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும்.

 
சிவலிங்கா என்ன மாதிரியான படம்?
 
சிவலிங்கா திரைப்படம் ஒரு கிரைம் ஹாரர் திரில்லர் படம். கன்னடத்தில் சிவராஜ் குமார் நடித்திருந்தார். 85 தியேட்டர்களில் 100  நாட்கள் ஓடியது. சந்திரமுகிக்குப் பிறகு கன்னடத்தில் இருந்து தமிழில் ரீமேக் செய்யும் படம் சிவலிங்கா.
 
படத்தின் கதை என்ன?
 
ஒரு பையன் ரெயிலில் சென்றுகொண்டிருக்கிறான். அவன் தனது வளர்ப்பு புறாவையும் உடன் கொண்டு செல்கிறான். கடைசி  ரெயில் என்பதால் அந்த கம்பார்ட்மென்டில் யாரும் இல்லை. எனவே அவன் தூங்கலாம் என நினைத்து படுக்கிறான். அப்போது  அந்த கம்பார்ட்மென்டில் இருந்து கண் தெரியாத ஒருவன் எழுந்து நடந்து வாசல் பக்கம் செல்கிறான். உடனே புறா அந்த  பையனை எழுப்புகிறது. அவன் எழுந்து குருடனை காப்பாற்ற முயற்சிக்கிறான். ஆனால், அவனோ திடீரென காப்பாற்ற வந்த  பையனை கீழே தள்ளி கொல்கிறான். அவனது ரத்தம் புறாவின் மீது விழுகிறது. இப்போது அந்த புறாதான் கொலைக்கு சாட்சி.  அந்த புறா, இந்த கொலையை செய்தது யார் என்பது குறித்து கதாநாயகனிடம் சொல்வதுதான் கதை. புறா எப்படி சொல்கிறது  என்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
 
இதில் லாரன்சின் கதாபாத்திரம் என்ன?
 
லாரன்ஸ் இதுவரை செய்யாத கதாபாத்திரத்தில் சிபிசிஐடி அதிகாரியாக வருகிறார். அவரது நடிப்பு வித்தியாசமாக இருக்கும்.  அதேசமயம் வழக்கமாக அவரது படத்தில் இருக்கும் தன்மைகளும் இருக்கும்.
 
நாயகி...?
 
ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.
 
வடிவேலுவை எந்த அளவு பயன்படுத்தியிருக்கிறீர்கள்?
 
சந்திரமுகிக்குப் பிறகு வடிவேலுவுக்கு இதில் பெரிய கேரக்டர். அந்த அளவுக்கு நன்றாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  சிபிசிஐடியிடம் மாட்டிக்கொண்ட திருடன் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார்.
 
படம் எப்போது ரிலீஸ்...?
 
சந்திரமுகி போன்று சிவலிங்காவும் தமிழ், தெலுங்கு இரண்டிலும் வெளியாகிறது. ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் செய்ய  திட்டமிட்டிருக்கிறோம்.