மிகச்சிறந்த திரை அனுபவம் கர!.. படம் பார்த்துவிட்டு பாராட்டிய தள்ளிய மாரி செல்வராஜ்...
போர்த்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் கர. இந்த படத்தில் மமீதா பைஜூ, கேஎஸ் ரவிக்குமார், கருணாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் கொள்ளை அடிக்கும் நபராக நெகட்டிவ் வேடத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். அவர் ஏன் கொள்ளையடிக்கிறார் என்கிற கேள்விக்கு படத்தில் பதில் இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கர திரைப்படம் ஏப்ரல் 30ஆம் தேதியான இன்று தியேட்டர்களில் ரிலீசாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இந்த படத்தை பார்த்த இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தை பாராட்டை தனது எக்ஸ் தளத்தில் கீழ்கண்டவாறு எழுதியிருக்கிறார்..
இப்போது தான் “கர” பார்த்து முடித்தேன். சரியான சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் மிக சிறந்த திரை அனுபவத்தை, திரை சிலிர்ப்பை, திரை நெகிழ்வை , திரை சிந்தனையை, திரை விறுவிறுப்பை எனக்குள் தூண்டிவிட்ட ஒரு நம்பிக்கையான படமாக இருந்தது. நேற்று பார்த்து உலுக்கிய ஒடிசாவின் ஜித்து முண்டாவின் முகத்தை இன்று திரையில் கரசாமியாக நெஞ்சுக்குள் கொண்டு வந்து உசுப்பிய தனுஷ் சார் அவர்களுக்கு அவ்வளவு நன்றியையும் அன்பையும் சொல்ல தோன்றுகிறது. அத்தோடு இப்படியான ஒரு படத்தை உருவாக்கிய ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என் நன்றியும் அன்பும்.. கர கொண்டாடப்படும் என பதிவிட்டிருக்கிறார்.