1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 23 ஜனவரி 2021 (14:03 IST)

இப்போலாம் ஓவர் பில்டப் படம் தான் எடுக்குறாங்க - இயக்குனர் R.V.உதயகுமார் வருத்தம்!

ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமு முத்துசெல்வன் தயாரித்துள்ள படம் “ முன்னா ” இப்படத்தின் சங்கை குமரேசன் இயக்கி இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
 
அப்போது பேசிய இயக்குனர் ஆர்.வி உதயகுமார், "இந்த முன்னா படத்தின் இயக்குநர் நடிகர் தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். இந்தக் கொரோனா கால கட்டத்தில் 150 நாட்களுக்கு மேல் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த உதவி இயக்குநர்களுக்கு சாப்பாடு போடுவதற்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோம். 
 
அப்போது நடிகர் விக்னேஷ் எங்களுக்கு பெரிய உதவி செய்தார். நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். ரஷ்யாவின் புரட்சிக்கு கூட சினிமா ஒரு உதவியாக இருந்தது. நாம் இனி அறிவுப்பூர்வமான சிந்தனைகளை சினிமாவில் கொண்டு வரணும். இப்போதெல்லாம் ஓவர் பில்டப்பில் தான் படம் எடுக்குறார்கள். நேர்மையாக படம் எடுக்க வேண்டும்.
 
நேர்த்தியாக படம் எடுத்தால் எப்படி ஓடாமல் போகும். நம் ரசிகர்கள் சரியான படங்களை நிச்சயமாக ஓட வைப்பார்கள். உழைப்புக்கு முன்னுரிமை கொடுங்கள். இந்தப்படம் எதையும் எதிர்பார்க்காமல் எடுத்திருக்கிறார்கள். இப்படியான தைரியம் தான் நிறைய பேர்களை உருவாக்கி இருக்கிறது. அதுபோல் இந்த இயக்குநரையும் பெரிதாக உருவாக்கும்" என்றார்