1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 23 மார்ச் 2023 (16:45 IST)

கல்யாணம் குறித்து கேட்ட சுஹாசினி - கோபத்தில் உச்சத்தில் மீனா கூறிய பதில்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்ரமாக அறிமுகமாகி பின்னர் ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார்.
 
மீனா பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகர் என்பவரை 2009ம் ஆண்டு திருணம் செய்துக்கொண்டார் . இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். இவர் தெறி திரைப்படத்தில் நடித்து கலக்கினார். 
 
இதனிடையே மீனாவின்  கணவருக்கு புறாவின் எச்சத்தால் ஏற்படும் சுவாசத் தொற்று ஏற்பட்டு அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து மீனாவுக்கு அடிக்கடி இரண்டாம் திருமணம் குறித்த கிசு கிசுக்குகளும் வதந்திகளும் வந்த வண்ணம் உள்ளது. 
 
இந்நிலையில் தற்போது அதற்கு முடிவுகட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மீனா, நடிகை சுஹாசினியின் நேர்காணலில் இது குறித்து பேசிய மீனா, என் கணவர் இறந்த விசயமே என்னால் இன்னும் நம்பமுடியவில்லை. அதற்குள் இப்படியொரு வதந்திகள் வெளியாவது எனக்கு மிகுந்த வேதனை கொடுக்கிறது. இப்போதைக்கு படங்களில் நடிக்க கவனம் செலுத்துகிறேன் முக்கியமாக  என் மகளின் எதிர்காலத்தை அமைத்து தருவதில் தான் என் முழு கவனமும் உள்ளது.