வாத்தி ஹீரோயின் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!
வாத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் பரிச்சயம் ஆகியுள்ளார் சம்யுக்தா. இவர் ஏற்கனவே தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் கூடுதல் கவனத்தை அவருக்கு பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் வாத்தி படம் பற்றி பேசியுள்ள சம்யுக்தா வாத்தி திரைப்படம் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து பேசுகிறது. மேலும் தன் பெயருக்குப் பின்னால் மேனன் என்ற சாதி பெயர் குறித்து கூறிய அவர் “வாத்தி படத்தில் அந்த பெயர் இருக்காது. சாதி அடையாளத்தை போட்டுக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சாதியிலும் உடன்பாடு இல்லை. என்னை சம்யுக்தா என்று அழைத்தாலே போதும்” எனக் கூறியுள்ளார்.அவரின் இந்த பக்குவமான பேச்சு பாராட்டுகளைக் குவித்துள்ளது.
இந்நிலையில் இப்போது இளைஞர்களின் விருப்ப நடிகை பட்டியலில் இணைந்துள்ள சம்யுக்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ரசிகர்களால் நிரம்பி வழிகிறது.அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. அந்தவகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் .