1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 2 பிப்ரவரி 2023 (11:28 IST)

என் தலைவி கம்பேக் கொடுத்தா சில பேருக்கு வேலை இருக்காது - ஓரங்கட்டப்படும் நயன்தாரா?

நடிகை திரிஷா நயன்தருவைந் மார்க்கெட்டை காலி செய்து வருகிறாரா? 
 
தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் நடிகையான திரிஷா கிட்டத்தட்ட 25 ஆண்டுக்கான சினிமாவில் நிலைத்திருக்கிறார். 39 வயதாகும் இவர் இன்னும் அதே இளமையோடு தான் இருந்து வருகிறார். 
 
பல சூப்பர் படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். 
அதற்கான அறிவிப்பு  நேற்று வெளியான நிலையில் சமூகவலைத்தளங்கள் முழுக்க த்ரிஷா - விஜய்யின் புகைப்படம் ஒன்று  வைரலாகியுள்ளது. இதனால் திரிஷா ரசிகர்கள், நான் தான் சொன்னேன்ல... என் தலைவி கம்பேக் கொடுத்தா இங்க சில பேருக்கு வேலை இருக்காது என நயன்தாராவை மறைமுகமாக சாடியுள்ளனர்.