வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Siva
Last Modified: வியாழன், 16 பிப்ரவரி 2023 (18:53 IST)

ஒரே படத்தில் 30 ஆண்டுகளுக்கு பின் இணையும் சல்மான்கான் - ஷாருக்கான்..!

shahruk salman
ஒரே படத்தில் 30 ஆண்டுகளுக்கு பின் இணையும் சல்மான்கான் - ஷாருக்கான்..!
ஒரே படத்தில் 30 ஆண்டுகளுக்கு பின் ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான கரன் அர்ஜுனன் என்ற படத்தில் ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் ஆகிய இருவரும் இணைந்து நடித்தார். இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பின் ஷாருக்கான் மற்றும் ஷர்மா கான் ஒரு திரைப்படத்தில் இணைய இருப்பதாகவும் இந்த படத்தை யார் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
முன்னணி பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ள தகவல் இரு தரப்பு ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த படத்தில் இருவருக்கும் சம அளவிலான கேரக்டர்கள் இருக்கும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva