செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By siva
Last Modified: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (12:58 IST)

விவேக் நினைவாக வீட்டில் மரக்கன்றுகளை நட்ட நடிகை!

விவேக் நினைவாக வீட்டில் மரக்கன்றுகளை நட்ட நடிகை!
சமீபத்தில் காமெடி நடிகர் விவேக் எதிர்பாராத வகையில் மாரடைப்பால் காலமானது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. குறிப்பாக அவர் அப்துல் கலாமின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தார். 33 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை நட்ட நிலையில் அவர் தனது இலக்கை அடையும் முன்னரே காலமாகிவிட்டார் என்பது சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் விவேக் விட்ட பணியை தொடர்ந்து நடத்த வேண்டும் என பல ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஆத்மிகா, மறைந்த விவேக் நினைவாக தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னால் முடிந்த இடங்களில் இந்த பணியை செய்ய முடிவு செய்திருப்பதாகவும் விவேக் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்களை நடுவது என்று அவரின் மகத்தான கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம் என்று ஆத்மிகா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
 
இதுகுறித்து ஆத்மிகா தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நடிகர் திரு.விவேக் அவர்களின் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன். அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்.