விவேக் இலட்சியத்தை நிறைவேற்றிய அருண் விஜய்!
சின்ன கலைவாணர் விவேக் மாரடைப்பு காரணமாக கடந்த 17ம் தேதி காலமானார். அவரது இறப்பு பல கோடி ரசிகர்கள், ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
நடிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் சமூக அக்கறை கொண்டவராக இருந்த விவேக் ஒரு முறை அப்துல் கலாம் ஐயாவை பேட்டி எடுத்தபோது, அவரின் அறிவுரையாக " இந்தியாவில் மரங்கள் நடுவது அவசியம்" என சொன்ன ஒரே காரணத்துக்காக, 1 கோடி மரங்கள் நான் என் வாழ்நாளில் நடுவேன் என லட்சியம் செய்தார் விவேக்.
அதன்படி இதுவரை சுமார் 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். மீதமுள்ள அவரின் லட்சத்தை நிறைவேற்றுவதற்குள் கடவுள் அழைத்துக்கொண்டார். இன்று அவரின் லட்சியத்தை பலர் கையிலெடுத்துள்ளார். அந்தவகையில் நடிகர் அருண் விஜய் தனது மகன் மற்றும் தந்தையுடன் சேர்ந்து மரங்கன்று நட்டு விவேக்கிற்கு நன்றி செலுத்தியுள்ளார்.