1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By siva

பாஜகவில் இருந்து இன்னும் 13 எம்.எல்.ஏக்கள் விலகுவார்கள்: சரத்பவார்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மூன்று பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு அமைச்சர் பதவி விலகிய நிலையில் மொத்தம் இன்னும் 13 எம்எல்ஏக்கள் பதவி விலகுவார்கள் என சரத்பவார் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் கட்சி தாவும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது ஏற்கனவே மூன்று பாஜக எம்எல்ஏ மற்றும் ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவர் பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாதி ஜனதா கட்சியில் இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்குமார் இதுகுறித்து கூறிய போது உத்தரபிரதேசத்தில் உள்ள மேலும் 13 பாஜக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர்கள் அனைவரும் சமாஜ்வாடி கட்சியில் இணைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி ஜனதா கட்சி ஒரு சில சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது