1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Suresh
Last Updated : சனி, 17 அக்டோபர் 2015 (13:16 IST)

காதலை மையப்படுத்திய படம், ஆனா டூயட் கிடையாது - 10 எண்றதுக்குள்ள படம் குறித்து விக்ரம்

வரும் 21 -ஆம் தேதி, 10 எண்றதுக்குள்ள வெளியாகிறது. அதனை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் விக்ரம்.


 

 
எப்போதும் போல, இந்தப் படம்தான் என்னுடைய கரியர் பெஸ்ட் என்பதாக இருந்தது விக்ரமின் பேச்சு.
 
விஜய் மில்டனை எப்படி பிடிச்சீங்க?
 
கோலிசோடா படத்தை பார்த்திட்டு, ஒரு லேட் நைட் விஜய் மில்டனுக்கு போன் செய்தேன். அப்போ, உங்ககிட்ட நல்ல கதை இருக்குதான்னு கேட்டேன். 
 
இருக்குன்னு அவர் சொன்னதும் உடனே வாங்கன்னு சொன்னேன். அது மிட்நைட்டா இருந்ததால மறுநாள் காலையில வந்து கதை சொன்னார். சூப்பரா இருந்தது.
 
முருகதாஸ் இதில் எப்படி வந்தார்?
 
நான் விஜய் மில்டனுடன் பேசுறதுக்கு முன்பே, கோலிசோடா படத்தை பார்த்திட்டு, என் கம்பெனிக்கு ஒரு படம் பண்ணுங்கன்னு முருகதாஸ் விஜய் மில்டன்கிட்ட கேட்டிருந்தார். அதனால், உடனே அவரை சந்திச்சேன். ஒரு வாரத்தில் எல்லாமே முடிவாயிடுச்சி.
 
படத்தை முடிச்சிட்டீங்க. இப்போ உங்க மனநிலை என்ன?
 
ஒரு நல்ல படத்தில் நடிச்சிருக்கிறோம்ங்கிற திருப்தியில் இங்க வந்திருக்கேன்.
 
10 எண்றதுக்குள்ள என்ன மாதிரியான படம்?
 
சம்பந்தமே இல்லாத ரெண்டு பேருக்குள்ள நடக்கிற லவ் ஸ்டோரிதான்...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

இந்தப் படம். படம் முழுக்க காதலை மையமாவச்சே போய்கிட்டிருக்கும்.
 
ஆனா, படத்துல டூயட் கிடையாது. காதல் இருந்தாலும் அதற்குள் வேறொரு விஷயமும் இருக்கும். அதை இப்போதே சொல்லிட்டா படம் பார்க்கிறபோது சுவாரஸ்யம் இருக்காது.
 
இதில் உங்க கதாபாத்திரம் என்ன?
 
கார் டிரைவரா நடிச்சிருக்கேன். சென்னையில் தொடங்கி உத்ரகாண்ட்ல முடியுற கதையிது.


 

 
விஜய் மில்டனுடன் பணிபுரிந்தது எப்படி இருந்தது?
 
நான் எந்த அளவுக்கு சினிமாவை நேசிக்கிறேனோ அதுக்கு மேல விஜய் மில்டன் சினிமாவை நேசிக்கிறவர்.
 
அவ்வளவு அற்புதமா கதை சொல்வார். அதை, அதைவிட அற்புதமாக படமாக்குவார். நல்ல டெக்னீஷியன். அதைவிட மிக நல்ல மனிதர். அவரோட மேஜிக்தான் இந்தப் படம்.
 
தயாரிப்பாளர் முருகதாஸ் பற்றி...?
 
அவரை மாதிரி ஒரு புரொடியூசர் கிடைக்கிறது கஷ்டம். ரொம்ப சுதந்திரம் கொடுத்தார். படம் பத்தி ஆரம்பத்தில் பேசுனபோது வந்தார். அப்புறம் படம் முடிஞ்ச அப்புறம்தான் வந்தார். அந்தளவுக்கு நம்பிக்கை வச்சிருந்தார்.
 
இந்தப் படத்தின் ஸ்பெஷாலிட்டி என்ன?
 
இதுவரை எத்தனையோ படங்களில் நடிச்சிருந்தாலும் இந்தப் படம் எனக்கு புதுசா இருந்தது. என்னை வேற மாதிரி ஒரு கோணத்தில் விஜய் மில்டன் காட்டியிருக்கார்.
 
படத்தைப் பார்த்த சென்சார்போர்ட் நண்பர் ஒருவர், ரொம்ப கேஷுவலாக பண்ணியிருக்கீங்க என்றார். இந்தப் படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தால் அதுக்கு விஜய் மில்டன்தான் காரணம்.