திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 18 ஜனவரி 2022 (15:08 IST)

100 ஆவது டெஸ்ட்டுக்கு மட்டும் தலைமையேற்க அழைத்த பிசிசிஐ… கோலியின் பதில்!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

இந்திய அணிக்கு கடந்த 7 ஆண்டுகளாக டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து இந்திய அணியை பல சாதனைகளைப் படைக்க வழிவகுத்தவர் விராட் கோலி. ஆனால் கடந்த சில மாதங்களாக அவருக்கும் பிசிசிஐக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், டி20 அணிக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அதன் பின்னர் ஒரு நாள் கேப்டன் பொறுப்பும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது அவர் அதிர்ச்சியளிக்கும் விதமாக சில தினங்களுக்கு முன்னர் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். இதனால் இந்திய ரசிகர்கள் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கவுனிசிலின் சார்பாக அடுத்து நடக்க இருக்கும் விராட் கோலியின் 100 ஆவது போட்டிக்கு மட்டும் கேப்டனாக செயல்படுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும், ஆனால் கோலி அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ‘ஒரு போட்டியில் எதுவும் மாறிவிடப் போவதில்லை’ எனவும் அவர் கூறியதாக சொலல்ப்படுகிறது.