செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2022 (18:03 IST)

மீண்டும் மழை: ஜிம்பாவே- தென்னாப்பிரிக்கா போட்டி ரத்து!

SA vs Zim
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று ஜிம்பாவே மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற நிலையில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட் செய்த ஜிம்பாவே அணி 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்தது, இதனை அடுத்து 9 ஓவர்களில் 80 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென மீண்டும் மழை பெய்தது
 
இதனால் 7 ஓவராக போட்டி குறைக்கப்பட்டது. இந்த நிலையில் 3 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 51 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran