ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 11 அக்டோபர் 2017 (11:32 IST)

ரூ.3 கோடிக்காக காத்திருக்கும் யுவராஜ் சிங்; அழைக்கழிக்கும் பிசிசிஐ

ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனதற்கு, பிசிசிஐ தர வேண்டிய இழப்பீடு தொகைக்காக யுவராஜ் சிங் காத்து கொண்டிருக்கிறார்.


 

 
இந்திய அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் காயம் காரணமாக அரையிறுதி போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. அதைத்தொடந்து நடைப்பெற்ற ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் பங்கற்க முடியாமல் போனது. 
 
பிசிசிஐ விதிமுறைப்படி ஐபிஎல் தொடரில் விளையாடும் இந்திய வீரர், சர்வதேச போட்டியின்போது காயம் ஏற்பட்டு ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போனால் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.
 
அதன்படி பிசிசிஐ யுவராஜ் சிங்கிற்கு சுமார் ரூ.3 கோடி வழங்க வேண்டும். இதுகுறித்து யுவராஜ் பிசிசிஐக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார். அவரது அம்மாவும் அதிகாரிகளை சந்தித்து இதுகுறித்து பேசியுள்ளார். 
 
உச்ச நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக்குழு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் யுவராஜ் சிங் இந்த பிரச்சனையை நிர்வாக குழுவின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.