1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 6 அக்டோபர் 2017 (22:23 IST)

தளபதி விஜய்யின் 'மெர்சல்' சென்சார் தகவல்கள்

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தின் டைட்டில் வழக்கு இன்று வெற்றிகரமாக முடிந்து, படக்குழுவினர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. நல்ல தீர்ப்பு வந்த ஒருசில மணி நேரத்தில் இந்த படம் சென்சார் செய்யப்பட்டது.



 
 
'மெர்சல்' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். தொடர்ந்து விஜய் படங்கள் 'யூ' சான்றிதழே பெற்று வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் 'யூஏ' சான்றிதழை விஜய் படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
'மெர்சல்' திரைப்படத்தின் சென்சார் பணிகள் முடிந்துவிட்டதை அடுத்து இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்ற முடிவு தீபாவளி தினத்திற்குள் வாபஸ் பெற வேண்டும் என்ற ஒரே ஒரு தடை மட்டுமே இப்போதைக்கு உள்ளதாகவும் அதுவும் வெற்றிகரமாக பேசி முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.