வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siv
Last Updated : திங்கள், 11 அக்டோபர் 2021 (14:32 IST)

டி20 உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா?

டி20 உலகக்கோப்பை வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா?
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 16ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் இந்த போட்டிக்காக அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 12 கோடி பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ 6 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடிக்கும் அணிகளும் தலா 3 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த முறை டி20 போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்றும் அனைத்து அணிகளும் நல்ல பார்மில் உள்ளதால் எந்த அணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
.