புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (11:32 IST)

பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் ஐபிஎல் நடத்த வேண்டும்! – கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கோரிக்கை!

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு நடத்துவது போல பெண்கள் அணிக்கும் ஐபிஎல் நடத்த வேண்டும் என கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கும் நிலை உள்ளது. ஆனால் இந்த ஐபிஎல் போட்டிகள் ஆண்கள் அணிக்கு மட்டுமே நடந்து வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய டி20 பெண்கள் அணி கேப்டன்ஹர்மன்ப்ரீத் கவுர் பேசியபோது “ஆண்கள் அணிக்கு நடத்துவது போல பெண்கள் அணிக்கும் ஐபிஎல் போட்டிகள் நடத்த வேண்டும். மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் பங்கேற்ற அனுபவத்துடன் இருப்பதால்தான் தஹீலா மெக்ரத் போன்ற வீராங்கனைகளால் சர்வதேச போட்டிகளில் ஜொலிக்க முடிகிறது” என தெரிவித்துள்ளார்.