1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. World test championship cricket

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா?

India Test
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டிக்கு இந்தியா தகுதி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன
 
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக புள்ளிகள் அடிப்படையில் அணிகள் தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் ஆஸ்திரேலியா தற்போது முதலிடத்திலும் இந்தியா தற்போது இரண்டாவது இடத்திலும் உள்ளன
 
சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளதை அடுத்து ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் தகுதி பெறுவது உறுதியாகி உள்ளது
 
 அதேபோல் இந்தியா இரண்டாவது இடத்திலும் இலங்கை மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே 5% வித்தியாசம் உள்ளது.
 
இந்த நிலையில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தே இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் ஒன்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
சூர்யகுமார் யாதவ்வை டெஸ்ட் அணியில் சேர்ப்பதற்கான நேரம் வந்துவிட்டது: கவுதம் கம்பீர் கருத்து